
இலங்கை தொடர்பில் கடந்த 23ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தினை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் குறித்து பிரதமரின் அறிக்கை முற்றாக நிராகரிக்கப்படுவதாகவும் கனடாவில் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில், இலங்கையின் கடந்த கால முரண்பாடுகள் குறித்து பிரதமர் கூறும் அறிக்கையினால் இன நல்லிணக்கத்திற்கு தடையாக உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், இலங்கையில் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவுமாறு கனடாவிடம் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.