
அரசாங்க நிதி தொடர்பான குழுவின் முன் அழைக்கப்பட்ட நிதி அமைச்சின் பொறுப்பான அதிகாரிகள் ஆஜராகாதமை தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழுவினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, நிதியமைச்சு தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அதிகாரிகள் அழைக்கப்படும் போது பாராளுமன்றத்திற்கு பொறுப்பான அமைச்சுக்களின் தலைவர்கள் குழுவின் முன் ஆஜராக வேண்டும் என குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் அரசாங்க நிதி தொடர்பான குழு நேற்று கூடிய போது குறித்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வருடம் ஜூன் மாத இறுதிக்குள் நிதி நிலைமையை அரசாங்க நிதிக் குழுவிடம் நிதியமைச்சகம் முன்வைத்ததாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.