
ஆயுர்வேத வைத்தியசாலைகளை முறைப்படுத்துவதன் மூலமும் நாட்டில் உள்ள வளங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் இந்நாட்டு மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்த முடியும் என அரச ஆயுர்வேத வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அரச ஆயுர்வேத வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பி.ஹேவாகமகே வைத்தியசாலைகளுக்குச் செல்லும் பலர் தற்போது ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டில் தற்போதுள்ள மருந்துப் பொருட்களை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள தேசிய சிறுநீரக வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள சிறுநீரக வைத்தியசாலைகளில் தற்போதுள்ள மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் சத்திரசிகிச்சை நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று தெரிவித்துள்ளது.