
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் சிவப்பு வெங்காயச் செய்கையில் பரவி வரும் நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் விவசாய திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இட்ர்ஹன்படி,குறித்த நோய் வெங்காய சாகுபடியில் காணப்படும் டிப்டெரா நோய் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் தற்போது யாழ்.மாவட்டத்தின் சுன்னாகம், தெல்லிப்பளை, மடகல், சங்கானை, சால்வெளி, கோப்பாய், வடமராட்சி ஆகிய பகுதிகளில் இந்நோய் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அறிக்கை வழங்குமாறு விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், இந்நோயைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை உடனடியாக தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.