
முகநூல் குழுமத்தின் ஊடாக உள்ளக பிரச்சினைகளை சமூகமயப்படுத்துவதன் மூலம் இலங்கை பொலிஸாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குறித்த செய்தியில் வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட முகநூல் குழுமத்தின் ஊடாக பகிரப்படும் உண்மைகளின் உண்மை மற்றும் பொய்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த சமூகவலைத்தளத்தில் பொலிஸார் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி இலங்கை பொலிஸாரின் நற்பெயருக்கு மட்டுமன்றி அனைத்து தரப்புகளின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகவும் பாதுகாப்பு சேவையுடன் தொடர்புடைய சில தரப்பினர் நிர்வாக மற்றும் அறிவுசார் தகவல்களை வெளிநாட்டவர்களிடம் பகிர்வதன் ஊடக நாட்டின் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.