
நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு அறையில் இருந்து 54 எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, குளியாபிட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால். குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு அறையில் இருந்து 54 எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளதாக நீதிமன்ற பதிவாளர் குளியாப்பிட்டிய பொலிஸில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.
அத்தோடு, குறித்த முறைப்பாடு தொடர்பில் நீண்ட விசாரணைகளை மேற்கொண்ட பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.