
இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் பதவிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 09 பேர் கொண்ட குழுவொன்றையும் விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்துள்ளார்.
குறித்த குழுவின் தலைவராக சிஏஜி டி சொய்சா உள்ளதோடு 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டம் மற்றும் செல்லுபடியாகும் விளையாட்டு உத்தரவுகளின்படி, விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், உத்தியோகபூர்வ தெரிவுக் குழுவை நியமித்து, கூட்டமைப்பின் சிறப்புப் பொதுச் சபைக் கூட்டத்தைக் கூட்டி இலங்கை கராத்தே தோ கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ தேர்தலை அழைத்து நடத்த வேண்டும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.