
காட்டு யானைகளின் தாக்குதல் காரணமாக நாட்டின் இரண்டு பகுதிகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, கிண்ணியாகலை கெஹெலல்ல பிரதேசத்தில் 3 பேருடன் மீன்பிடிக்கச் சென்ற அம்பாறை, பரகஹகலே பகுதியைச் சேர்ந்த ஒருவரே யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், ஹந்துங்கம, ஹிபிலியாகொட குளத்தின் நிர்மாணப் பணிகளுக்காக துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மற்றைய நபர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் வெஹெரகலகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.