
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன மிகவும் பாதுகாப்பானவை எனவும் அதன் அங்கத்தவர்களின் நிலுவைகள் அப்படியே பாதுகாக்கப்பட்டு வட்டியும் அட்டவணைப்படி வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, ருவன்வெல்ல கோனகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பில் சிலர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் மேற்கண்டவாறு பதிலளித்தார்.