
அங்கொட தேசிய மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, கைது செய்யப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர்களை எதிர்வருகின்ற 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்தோடு, சந்தேகநபர்கள் வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்கள் எனவும், அவர்கள் உயிரிழந்தவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்தப்படும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.