
கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற கோத்தா கோ போராட்ட களத்தில் ஏற்பட்ட மோதலின் பின்னர் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வன்முறைகளை கட்டுப்படுத்த தவறிய பொலிஸ் மா அதிபர் மற்றும் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரிடம் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த மனுவில் முன்வைக்கப்பட்ட விடையத்திற்கு பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களம் பொறுப்புக் கூறப்படுவதனால் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி நீதிமன்றில் தமது பக்க நியாயங்களை முன்வைக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஜனாத்.எஸ். விதாரண என்பவற்றினால் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட்டுள்ள மனுவின் பூர்வாங்க பரிசீலனையின் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினுடைய தலைமை நீதிபதியான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர்கள் அடங்கிய அமர்வானது குறித்த உத்தரவினை பிறப்பித்திருக்கின்றது.
இதேவேளை, கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடல், கோட்டா கோ கிராமத்தின் போராட்ட களத்தில் ஏற்பட்ட மோதலின் பின்னர் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வன்முறைகளை கட்டுப்படுத்த பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் தவறியதாக மனுதாரர் கோரியுள்லத்தோடு பொலிஸ் மா அதிபர் இதனைப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையில், பொலிஸ் மா அதிபர் உட்பட,குறித்த சம்பவத்திற்கு காரணமான சகல பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பிரதிவாதிகளாக பெயரிடுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தை மனுதாரர் கோரியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, இந்த சம்பவத்திற்கு காரணமான பொலிஸ் மா அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை மனுதாரர் கோரியுள்ளார்.