
சீனாவில் சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் இருப்பு வெளியீடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, டுவிட்டர் பதிவில், 2வது தொகுதி எரிபொருள் நாளை இலங்கைக்கு வரும் எனவும் பெற்றோல் நிலைய விநியோகஸ்தர்களுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட பின்னர் சினோபெக் நாடு முழுவதும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் பெட்ரோலிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சினோபெக் நேரடியாக அந்நிய செலாவணியை செலவிட்டு இலங்கைக்கு செல்வத்தை கொண்டு வருவதாகவும் இதனால், இந்நாட்டின் உள்ளூர் நிதி நிறுவனங்களுக்கு சுமை குறையவுள்ளதாகவும் மேலும் சினோபெக் 12 மாத நிதியுதவியுடன் இலங்கைக்கு எரிபொருளைக் கொண்டுவருவதக்கவும் அமைச்சரின் டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சந்தையில் புதிய சப்ளையர்களின் வருகையுடன், பெற்றோலியப் பொருட்களுக்கான அந்நிய செலாவணி தேவைகள் தளர்த்தப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.