
அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோவிற்கும், மனுஷ நாணயக்காரவிற்கும் அண்மைக்காலமாக விதிக்கப்பட்டிருந்த தடையினை ஐக்கிய தேசியக் கட்சி நீக்கியுள்ளது.
இதன்படி கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் அவர்களை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.