
முஸ்ரிப் முபாரக்
அம்பாறையிலிருந்து பயணித்த அம்பாறை – கல்முனை தனியாருக்கு சொந்தமான பேருந்தும் இலங்கை போக்குவத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்படி, அம்பாறையில் இருந்து பயணித்த குறித்த இரு பேருந்துகளும் மாவடிப்பள்ளி பலத்திற்கு அருகாமையில் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது குரு டிவி நிருபர் தெரிவிதத்தார்.
இதேவேளை, குறித்த பேருந்தில் பயணித்த எவருக்கும் எவ்வித ஆபத்துக்களும் இல்லை எனவும் அண்மை காலமாக பேருந்து ஓட்டுனர்களின் அசமந்த போக்கினாலும் ஒருவரை ஒருவர் முந்தி செல்வதற்க்காய் முற்படுவதினாலும் நாட்டில் அதிகளவான வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
மேலும், இவ்வாறான சாரதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் இடத்தில் உள்ளவர்கள் தகுந்த நடவடிக்கையினை எடுப்பார்களேயானால் இவ்வாறான விபத்துக்களை ஓரளவேனும் குறைக்கலாம் என குறித்த பேருந்தில் பயணித்த பயணிகள் கருத்து தெரிவித்தனர்.