
30 சதவீதத்துக்கும் மேலாக நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, உணவகங்கள் அதிகளவு நீரைப் பயன்படுத்துவதால், நீர் கட்டண திருத்தத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்ட தொகையை வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிட வேண்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் நீர் கட்டணத்தை உயர்த்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
மேலும், வசதிபடைத்த மற்றும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே ஓரளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.