
எவ்வித நியாயமான காரணமும் இன்றி தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை செல்லுபடியற்றதாக்கி உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி கூடி பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த மனு, முர்து பெர்னாண்டோ, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தம்மை எவ்வித நியாயமான காரணமும் இன்றி கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்ததன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.