
லிட்ரோ எரிவாயுவின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று (04) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
அத்தோடு, உலக சந்தையில் எரிவாயுவின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும், ஆனால் நிறுவனத்தின் திறமையான பங்கு முகாமைத்துவம் காரணமாக தற்போதைக்கு எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.