
18,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நேற்று (04) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இதன்படி, உலக வங்கியின் உதவியுடன் வியட்நாமில் இருந்து குறித்த உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளதுடன் இந்த யூரியா உரத்தை நெல் சாகுபடிக்கு தேவையான பகுதிகளுக்கு விநியோகிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.