
சிங்கப்பூரின் புதிய அதிபராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, சிங்கப்பூரின் புதிய அதிபராக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் துணைப் பிரதமராகப் பதவி வகித்த தர்மன் சண்முகரத்தினம் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
அவர் நிதி, கல்வி மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சராக இருந்ததோடு அவர் முன்னாள் பொருளாதார நிபுணராகவும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், சிங்கப்பூரில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களை வீழ்த்தி 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.