
இந்தியாவைத் தொடர்ந்து நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் “மூன் ஸ்னைப்பர்” என்கின்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு இன்று அனுப்பியுள்ளது.
இதற்கு முன் மூன்று முறை, ஜப்பான் நிலவை ஆய்வு செய்யத் தயாரானபோதும் வானிலை பாதிப்புகள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக குறித்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டிருந்தது.
ஜப்பான் தனது நிலவில் ஆய்வு செய்யும் விண்கலத்தை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஜப்பான் தனது நிலவு ஆய்வுக்கான விண்கலத்திற்கு “மூன் ஸ்னைப்பர்” என்று பெயரிட்டுள்ளதோடு ஜப்பானின் திட்டப்படி, இந்த பயணம் வெற்றிகரமாக நிலவை அடைந்தால், அடுத்த பெப்ரவரி மாதம் நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஜப்பானின் நிலவுப் பயணம் வெற்றி பெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவில் தரையிறங்கும் ஐந்தாவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுக்கொள்ளும்.