
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று (08) இரவு 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் மாரகேஷ் பகுதியில் 18.5 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
மேலும், குறித்த நிலநடுக்கத்தால் தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 632 ஆக உயர்வடைந்துள்ளது.