
நேபாளத்தில் இரண்டு நிலநடுக்கங்களுக்குப் பிறகு இன்று டெல்லியில் பாரிய நிலநடுக்கங்கள் உணரப்பட்டன – ஒன்று 4.6 ரிக்டர் எனவும் மற்றொன்று 6.2 ரிக்டறிலும் 5 கிமீ ஆழத்திலும் ஏற்பட்ட்தாக தேசிய நில அதிர்வு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதோடு முதலாவது நிலநடுக்கம் பிற்பகல் 2:25 மணிக்கும்இரண்டாவது நிலநடுக்கம் பிற்பகல் 2:51 மணிக்கு ஏற்பட்ட்தாகவும் என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறித்த நிலநடுக்கம் டெல்லியின் பல பகுதிகளிலும் உணரப்பட்டதோடு இரண்டாவது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டெல்லி-என்சிஆர் குடியிருப்பாளர்கள் தங்கள் அலுவலகங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, “நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம். தயவுசெய்து உங்கள் கட்டிடங்களில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியே வாருங்கள், ஆனால் பீதி அடைய வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்த வேண்டாம்! ஏதேனும் அவசர உதவிக்கு, 112 என்ற எண்ணை அழைக்கவும்” என்று டெல்லி காவல்துறை அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளதோடு உத்தரபிரதேசத்தின் லக்னோ, ஹாபூர் மற்றும் அம்ரோஹா ஆகிய இடங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகளும் அதிர்வுகளை சந்தித்ததாக தேசிய தலைநகரில் நிலநடுக்கம் உணரப்பட்டவுடன், மக்கள் கட்டிடங்களை காலி செய்யும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஆதாரம் – என்டிடிவி