
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தமை தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்களால் முறையப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அறிய முடிகின்றது.