
பாராளுமன்ற குழுக்கூட்டங்களில் வெளிநபர்கள் பங்கேற்க வேண்டும் எனறால் சபாநாயகரிடம் எழுத்துமூலமான முன் அனுமதியினைப் பெறுவதானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாராளுமன்றத்தின் அமர்வு இன்று ஆரம்பிக்கப்பட்டபோது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறித்த விடையம் தொடர்பில் தெரிவித்ததோடு அவ்வாறு அனுமதி பெறுவதாக இருந்தால் எழுத்துமூலமான முன் அனுமதி பெறுவது அவசியம் எனவும் அவ்வாறு அனுமதி பெறாத எந்தவொரு நபரும் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் பங்கேற்க முடியாது எனவும் அறிவித்தார்.
அத்தோடு, குழுத் தலைவர்கள் குழு தொடர்பில் தங்கள் பணி எல்லைகளுக்கு அப்பால் செல்வது குறித்தும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனக்கு முறைப்பாடுகள் கிடைத்துவருதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டினர்.
மேலும், பாராளுமன்றத்தின் நீண்டகால மரபுகளைப் பாதுகாக்கும் வகையில் செயற்படுவதற்கு அனைத்துக் குழுத் தலைவர்களும் நிலையியற் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் எனவும் வலியுறுத்தியதோடு உத்தியோகபூர்வ கடிதங்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது எனவும் சபாநாயகர் அறிவுறுத்தினார்.