
யாழ்ப்பாணத்தில் சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியுள்ள கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதன்படி, காங்கேசன்துறை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் காரைநகரின் சாம்பலோடை சிவகாமி அம்மன் ஆலய வீதியில்இருக்கின்ற பற்றைக்காட்டினுள் இருந்து 101 கிலோவும் 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி, மீட்கப்பட்டுள்ள கேரள கஞ்சாவினுடைய பெறுமதியானது சுமார் 3 கோடி ரூபாய் எனவும் மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காங்கேசன்துறை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.