
தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் தாம் இல்லாத நேரத்தில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை பாரியளவில் மீறப்பட்டுள்ளதாகவும் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார குறிப்பிட்டார்.
அத்தோடு, குறித்த விடயம் தொடர்பில் சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் ஆராயுமாறு சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்தல் வழங்கியுள்ளதாகவும் குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தாம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் தமக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்த உறுப்பினர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் தமது சிறப்புரிமைகளை மீறிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார மேலும் தெரிவித்தார்.