அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் விடுமுறையின் எண்ணிக்கையை 45 நாட்களில் இருந்து 25 ஆகக் குறைப்பது தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஓய்வூதியங்களுக்கான பணிப்பாளர் நாயகம், திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு குறித்த நோக்கத்திற்காக நிறுவனக் குறியீட்டின் விதிகளைத் திருத்துவதற்கு முன்மொழிந்துள்ளார்.
மேலும், விடுமுறை நாட்களை 10 சாதாரண விடுமுறை நாட்களாகவும், 15 ஓய்வு விடுமுறை நாட்களாகவும் மாற்றுவதற்கும் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.