இன்று (டிசம்பர் 28) முதல் அமுலுக்கு வரும் வகையில், உணவுப் பொருட்களின் விலைகளை மேலும் குறைத்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.
இதன்படி, குறைக்கப்பட்ட கட்டணங்கள் பின்வருமாறு: உள்ளூர் தயாரிப்பான 425 கிராம் டின் மீநின்னுடைய 475 ரூபாவிலிருந்து 55 ரூபாவினை குறைத்துள்ளதோடு, 1 கிலோ உருளைக்கிழங்கு தற்போதைய விளையான 280 ரூபாவிலிருந்து 5 ரூபாவினை குறைத்துள்ளதுடன் 1 கிலோ சிவப்பு அரிசியினுடைய தற்போதைய விலையான 175 ரூபாயிலிருந்து 5 குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், சிவப்பு பருப்பு, வெள்ளை நாட்டு அரிசி மற்றும் வெள்ளை அரிசி ஆகியவைக்கு 1 கிலோவிற்கு 1 ரூபாய் வீதம் குறைக்கப்பட்டுள்ளது.