புத்தாண்டுக்குப் பின்னர் சிறுவர்களிடையே வயிற்றுப்போக்கு அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படி, டைபாய்டு, காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்றவையும் குழந்தைகள் மத்தியில் பரவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், வாந்தி, பேதி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.