நிட்டம்புவ, வத்துபிட்டிவல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பை லொறியொன்றில் மோதியதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
லொறியில் கைப்பை சிக்கியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் அதே லொறியின் மீது மோதியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (19) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 54 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.