கடந்த 3 நாட்களாக சந்தையில் விற்பனை செய்யப்பட்டு ஒரு டன் இரும்பு கம்பியின் விலை 38,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மஇதற்க்கு முதல் 254,500 ரூபாவிற்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்த ஒரு டன் இரும்பு கம்பியின் விலை தற்பொழுது 292,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுலுள்ளது.
அந்தவகையில் 10 மில்லிமீற்றர் இரும்பு கம்பி ஒன்றின் விலை 1,040 ரூபாவுக்கும், 12 மில்லிமீற்றர் கம்பி ஒன்றின் விலை 1,500 ரூபாவுக்கும், 16 மில்லிமீற்றர் கம்பி ஒன்றின் விலை 1,725 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து , சந்தைகளில் சிலவகையான சீமெந்து நிறுவனங்கள் தங்களினது உற்பத்திகளுக்கான விலையை அதிகரித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இதற்கமைய 1,500 ரூபாவாக காணப்பட்ட ஒரு மூடை சீமெந்து மூடையின் தற்போதைய விலை 1,850 தொடக்கம் 1,900 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.