
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருக்கு இடையில் தேவையான மருந்துகளை பெற்றுக் கொள்வது மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பங்களாதேஷுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் நேற்று (25) பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த போது இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். .
அங்கு இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் ஏற்றுமதிச் சந்தையை புத்துயிர் பெறுவதற்குத் தேவையான ஆதரவைப் பெறுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.