
அமெரிக்க கேபிடல் கட்டிடத்திற்குள் போராட்டக்காரர்களை தாக்கியது தொடர்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கலவரத்தை முன்னெடுத்தது உள்ளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று விசாரணை நடத்திய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தலைமையிலான குழுவினால் .18 மாதங்களாக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு குழு ஏகமனதாக வாக்களித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் முன்னாள் உதவியாளர் ஹோப் ஹிக்ஸ் தோல்வியை ஏற்க மறுத்த ஆடியோ பதிவையும் குறித்த குழு சமர்பித்துள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் ட்ரம்பிற்கு எதிராக 04 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனவரி 06, 2021 அன்று, டிரம்ப் ஆதரவாளர்கள் என்று கூறி, காங்கிரஸ் கட்டிடத்தை முற்றுகையிட்ட எதிர்ப்பாளர்கள், ஜோ பைடனை அமெரிக்க ஜனாதிபதியாக அறிவிப்பதைத் தடுத்தனர் எனவும் குற்ற, சடடப்பட்டுள்ளது.
ஆனால் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், சம்பந்தப்பட்ட குழுவை கடுமையாக விமர்சித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.