
எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் நாட்டில் பணவீக்கத்தை ஒற்றை இலக்கமாக குறைக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, அவிசாவளை சித்தாவகபுர நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேலும் இந்த நாட்டில் நிலவும் பணவீக்க நிலைமை தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.