
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாளை (07) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.
அத்தோடு, நாளை (07) முதல் 15 ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கு இந்த விசேட ஏற்பாட்டின் கீழ் பஸ்கள் இயக்கப்படவுள்ளதோடு எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை, வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு இந்த விசேட பேருந்து வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இதற்காக சுமார் 7,000 தனியார் துறை பேருந்துகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.