
கடத்தல் வழக்கில் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட முன்னாள் இந்திய அரசியல்வாதியும் அவரது சகோதரரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தமது உண்மைகளை முன்வைக்க தயாரான நிலையில் அவர்கள் பொது இடத்தில் சுடப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்தோடு, இந்த சம்பவம் சில தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் குறித்த நபர்களான முன்னாள் இந்திய அரசியல்வாதியான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது பொலிஸ்பாதுகாப்புடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, முன்னாள் அரசியல்வாதியையும் அவரது சகோதரரையும் கைவிலங்கிட்டு பொலிசார் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற போது, அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் கருத்து கேட்டதாககவும் அவர்கள் பதிலளிக்கத் தயாராகும் போது, அருகில் வந்த துப்பாக்கிதாரி அவர்களின் தலையில் சுட்டதாகவும் இச்சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் போன்று வருகைதந்திருந்த மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், குறித்த அரசியல்வாதியின் மகனும் நேற்று பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.