
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழக வருடாந்த இப்தார் நிகழ்வும், இராப்போசன விருந்துபசார நிகழ்வும் விளையாட்டுக்கழக தலைவரும் , தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோகத்தருமான எம்.பி.எம். பாஜில் தலைமையில் சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று (16) மாலை இடம்பெற்றது.
சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழக முகாமையாளர் எம்.எம். எம். பஸ்மீரின் நெறிப்படுத்தலில், கழக ஊடக செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வில் கழகத்தின் பிரதித் தலைவரும், சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய பிரதியதிபருமான ஏ.சி.எம். நிஸார் ஆரம்ப உரை நிகழ்த்தி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். நிகழ்வின் மார்க்க சொற்பொழிவை சாய்ந்தமருது நூராணிய ஜும்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி அல்ஹாபிழ் எம்.ஐ.எம். றியாஸ் (அல்தாபி) நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் இலங்கை பொதுசேவை ஆணைக்குழு முன்னாள் உறுப்பினர் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பகுதி பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாடசாலைகளின் பிரதி மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், நிகழ்வின் அனுசரணையாளர்கள், பொது அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், பிரதேச விளையாட்டு கழகங்களின் பிரதானிகள், சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக் கழக நிர்வாகிகள், வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.