
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கிழக்கு மாகாணத்திற்கான இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மாறாக பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதோடு தேசிய பொலிஸ் ஆணைக்குழு நேற்று கூடிய போது இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
அத்தோடு, கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தம்மை இடமாற்றம் செய்வது தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோவுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
மேலும், தேசிய பொலிஸ் ஆணைக்குழு நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடியதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்தார்.
இதன்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அனுப்பிய கடிதம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, மத்திய மாகாணத்தில் இருந்து குற்றவியல் மற்றும் போக்குவரத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்ட பிரியந்த வீரசூரிய, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் முறைப்பாடு எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.