
இந்தியாவின் மூன்று முக்கிய நகரங்களில் (சென்னை, கொச்சின் மற்றும் பெங்களூர்) நடைபெற்ற ஐந்து நாள் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்ச்சி கொச்சினில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.
இதன்படி, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் .ஹரின் பெர்னாண்டோ கலந்துகொண்டதோடு சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களும் மக்களும் கலந்து கொண்டதுடன் இலங்கையின் சுற்றுலாத்துறையின் மேம்பாடு தொடர்பாக பல வெற்றிகரமான கலந்துரையாடல்களை அவர்கள் இணைந்து நடத்தியுள்ளனர்.
அத்தோடு, ஆண்டின் அடுத்த எட்டு மாதங்களுக்கு, அதிக இந்திய சுற்றுலாப் பயணிகளை நம் நாட்டிற்கு வரவழைத்து, அவர்களுக்கு வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இடங்களை வழங்குவதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.
மேலும், சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள பெருந்தொகையான மக்கள் மற்றும் தெற்காசிய பிராந்திய சுற்றுலா வர்த்தக நாம தூதுவர் சனத் ஜயசூரிய, இலங்கை மாநாட்டு பணியகத்தின் தலைவர் திசும் ஜயசூரிய, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு ஆகியோர் கலந்துகொண்டனர்.