
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் நாளை நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் முறை மூலம் அனுப்பப்படும் எனவும் இது தொடர்பான விண்ணப்பங்கள் அனுப்பும் பணி நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் நாளை நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
.
அத்தோடு, கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்கு பிறகு ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது
இதேவேளை, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதே காரணமாக உயர்தர விடைத்தாள் தேர்வுக்கான மதிப்பெண்கள் வழங்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை எனவும் பல சந்தர்ப்பங்களில், பல தரப்பினரும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் மாணவர்களைப் பற்றி சிந்தித்து அதில் பங்கேற்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், தங்களின் பிரச்னைகளுக்கு திறம்பட, நேர்மறை பதில் அளித்தால், உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணியில் இணைவோம் என தெரிவித்துள்ளதுடன்
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடுத்த வாரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் நிபுணத்துவ சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.