
உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதில், நாட்டின் வங்கி அமைப்பு மற்றும் பொது வைப்புத்தொகையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, எந்தவொரு கடன் மேம்படுத்துதலும் வங்கி முறைமை மற்றும் பொது வைப்புகளின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கப்படும் என நேற்று இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை தொடர்பான மாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பேணுவதே இலங்கை மத்திய வங்கியின் பிரதான நோக்கமாகும் எனவும் கடந்த காலங்களில் சாமானியர்களின் வங்கி டெபாசிட் மற்றும் வங்கி முறையின் ஸ்திரத்தன்மை குறித்து பல்வேறு போலி பிரச்சாரங்கள் வெளியிடப்பட்டதாவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், பதிலளித்த மத்திய வங்கி ஆளுநர், வங்கி முறைமை மற்றும் பொது வைப்புத்தொகையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.