
சிறுநீரக உதவி, முதியோர் உதவி உள்ளிட்ட பொது உதவிகளை எவ்வித வெட்டுமின்றி அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, தெஹியோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு, காப்புறுதிப் நலத்திட்டம் தொடர்பான உண்மைகளை சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாகவும் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பொது உதவிகள் அறவே குறைக்கப்பட மாட்டாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.