
அடுத்த மாதத்திலிருந்து எரிபொருள் ஒதுக்கீட்டினை இரு மடங்காக அதிகரிக்கப்பதாவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த 7 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீடானது அடுத்த மாதத்தினுடைய எரிபொருள் விலைத் திருத்தத்திலிருந்து 14 லீற்றராக அதிகரிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருளினுடைய விலயில் திருத்தத்துடன் எரிபொருள் ஒதுக்கீடினுடைய திருத்தமும் மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, வெலிகம பிரதேசத்தில் நடைப்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு இதெரிவித்தார்.