
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்து அதே விமானத்திலேயே உயிரிழந்துள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்படி, நேற்றிரவு 10:35 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 605 ல் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளதோடு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளா குறிப்பிடப்பட்டுள்ளது..
மேலும், விமானம் தரையிறங்கிய பின்னர், சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.