
இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய்லாந்திற்கு தமது உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டார் பிரதமர் தினேஷ் குணவர்தன.
இதன்படி, பிரதமருடன் 11 பேர் கொண்ட குழுவொன்று தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை,அவர்கள் இன்று அதிகாலை 01.10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 402 இல் தாய்லாந்தின் பாங்காக் நோக்கிச் சென்றுள்ளதாகவும் தாய்லாந்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட “சக் சுரின்” என்ற யானை இன்னும் சில நாட்களில் கொண்டு வரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.