
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையினால் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, அமெரிக்கா டொலரின் பெறுமதி வீழ்ச்சியே இதற்க்கு காரணம் எனவும் மருந்துகளின் விலை சுமார் 16% குறைக்கப்படும் என்றும் அமைச்சரின் டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.