ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுடைய பதில் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (25) இடம்பெற்ற அக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் இன்று பிற்பகல் கட்சியின் பதில் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் கொழும்பில் கூடியது.