ஆன்லைன் செய்தி அனுப்பும் தளமான வாட்ஸ்அப் செயலியானது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கணக்குகளை மாற்றும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, வாட்ஸ்அப் செயலியினை பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இப்போது ஒரே சாதனத்தில் இரண்டு கணக்குகளுக்கு மாறக்கூடிய வசதியினை செயற்படுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்டு பயனர்கள் வாட்ஸ்அப் அமைப்புகளுக்குச் சென்று புதிய கணக்கைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது தங்கள் மற்ற கணக்கிற்கு மாறுவதன் மூலமோ இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த அம்சங்களுடன், பயனர்கள் ஒரே சாதனத்தில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர்கள் மற்றொரு வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்த கூடுதல் சாதனத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் ஒரே சாதனத்தில் தங்கள் கணக்குகளைப் பிரிக்க விரும்பும் பயனர்களுக்கு குறித்த வசதியானது பயனுள்ள செயற்த்திட்டம் என தெரிவிக்கப்படுகின்றது.