ஈரான் தெஹ்ரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (26) ஈரான் பயணித்துள்ளதுடன், அங்கு ஈரான் விவசாய அமைச்சர் மொஹமட் அலி நிக்பக்ட்டை சந்திக்க உள்ளார்.
குறித்த சந்திப்பில் புதிய விவசாய தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மகிந்த அமரவீர EXPO இல் பங்கேற்பதில்லை என முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், ஈரான் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நாட்டில் குறித்த கண்காட்சியில் பங்குபற்றத் தீர்மானித்திருந்தார்.