இலங்கைக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதியுடன் இணைந்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட முன்னாள் பிரித்தானிய பிரதமர், ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.